spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'அகில உலக கடவுளுக்கு வேண்டுகோள்'....மாற்றுத்திறனாளி ரசிகரின் பாராட்டு கடிதம் ... பார்த்திபனின் நெகிழ்ச்சி பதில்!

‘அகில உலக கடவுளுக்கு வேண்டுகோள்’….மாற்றுத்திறனாளி ரசிகரின் பாராட்டு கடிதம் … பார்த்திபனின் நெகிழ்ச்சி பதில்!

-

- Advertisement -

'அகில உலக கடவுளுக்கு வேண்டுகோள்'....மாற்றுத்திறனாளி ரசிகரின் பாராட்டு கடிதம் ... பார்த்திபனின் நெகிழ்ச்சி பதில்!மிக்ஜம் புயலின் கோர தாண்டவத்தால் மீள முடியாமல் திணறி வருகின்றனர் சென்னைவாசிகள். பல சினிமா பிரபலங்கள் மற்றும் தன்னார்வலர்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகின்றனர். அரசு சார்பிலும் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக நடிகர் பார்த்திபன் தீவிரமாக களத்தில் இறங்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கியும் வேண்டிய உதவிகளைச் செய்தும் வருகிறார். இச்செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவின. இதனால் பார்த்திபனை வாழ்த்தும் விதமாக நந்தகுமார் என்னும் மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவர் எழுதிய கடிதம் பார்த்திபனை நெகிழச் செய்துள்ளது. அந்த ரசிகரின் கடிதத்தில் “மனித நேயம் கொண்ட அன்பு நேசகரை வாழ்த்துவதாகவும், அவருக்கு அடுத்தடுத்து வெற்றிகள் அமைய அகில உலக கடவுளை மனம் உருகி வேண்டிக் கொள்வதாகவும், ஒரு முறையாவது இந்த மாற்றுத்திறனாளி ரசிகனுக்கு போன் செய்யுங்கள்” என்றும் குறிப்பிட்டு தன்னுடைய அலைபேசி எண்ணையும் எழுதியுள்ளார் அந்த ரசிகர்.'அகில உலக கடவுளுக்கு வேண்டுகோள்'....மாற்றுத்திறனாளி ரசிகரின் பாராட்டு கடிதம் ... பார்த்திபனின் நெகிழ்ச்சி பதில்!
இக்கடிதத்தை படித்து மனம் நெகிழ்ச்சி அடைந்த பார்த்திபன் ஒரு ரசிகன் தன்மீது வெளிப்படுத்திய அன்பை சமூக வலைத்தள பதிவின் மூலம் பகிர்ந்துள்ளார். மேலும் இந்த பதிவில் பார்த்திபன் சமூக அக்கறையோடு”அந்த ரசிகருடன் அலைபேசியில் பேசி தன் மீது கொண்ட அன்பிற்கு நன்றி கூறி மகிழ்ந்ததாகவும், நான் எந்த கட்சியிடமும் பணம் வாங்க்கி கொண்டு உதவவில்லை, தனிப்பட்ட முறையில் எந்த ஒரு கட்சியையும் சாராதவன் என்றும், கேள்வி கேட்க வேண்டிய கட்டாயம் இருந்தால் யாரை வேண்டுமானாலும் கேள்வி கேட்பேன், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உதவி கேட்டு பல அழைப்புகள் வந்து கொண்டே இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் தொடர்ந்து பார்த்திபன் களத்தில் நின்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

MUST READ