இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், மதராஸி படத்திற்கு ‘யு/ஏ’ சான்று கிடைத்ததற்கான காரணத்தை கூறியுள்ளார்.
பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் மதராஸி எனும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படம் சிவகார்த்திகேயனின் 23வது படமாகும். ‘அமரன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு வெளியாகும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி படத்திலிருந்து வெளியான ட்ரெய்லரும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அது மட்டும் இல்லாமல் நாளை (செப்டம்பர் 5) இந்த படத்தை திரையரங்குகளில் காண ரசிகர்கள் பலரும் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஏ.ஆர். முருகதாஸ், சிவகார்த்திகேயனை எந்த மாதிரியான பரிமாணத்தில் காட்டியிருப்பார் என்று ஆர்வமும் இருக்கிறது. இந்நிலையில் ஏ.ஆர். முருகதாஸ் சமீபத்தில் நடந்த பேட்டியில் ‘மதராஸி’ படம் குறித்து பேசி உள்ளார்.
“#Madharaasi trailer Censored ‘A’ but film censored ‘U/A’. As per censor we have reduced/Mild Blood🔞🩸. I know #Sivakarthikeyan‘s hardcore fans are children & ladies✨. So I don’t want ‘A’ certificate, I’m specific that families has to enjoy it♥️”
– #ARM pic.twitter.com/McdDbViEUV— AmuthaBharathi (@CinemaWithAB) September 4, 2025

அதன்படி அவர், “மதராஸி படத்தின் டிரைலருக்கு ‘ஏ’ சான்று வழங்கப்பட்டது. ஆனால் படமானது ‘யு/ஏ’ சென்சார் செய்யப்பட்டது. சென்சாரின்படி நாங்கள் படத்தில் சில காட்சிகளை குறைத்துள்ளோம். குழந்தைகள், பெண்கள் ஆகியவர்கள் தான் சிவகார்த்திகேயனின் தீவிர ரசிகர்கள் என்று எனக்கு தெரியும். எனவே எனக்கு ‘ஏ’ சான்று தேவை இல்லை. குடும்பங்கள் படத்தை ரசிக்க வேண்டும் என்று நான் திட்டவட்டமாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.