spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஏ ஆர் ரகுமானின் மறக்குமா நெஞ்சம்..... புதிய தேதி அறிவிப்பு!

ஏ ஆர் ரகுமானின் மறக்குமா நெஞ்சம்….. புதிய தேதி அறிவிப்பு!

-

- Advertisement -

இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி சென்னை பனையூரில் நடைபெற இருந்தது. திறந்த வெளியில் 30000 பேர் கலந்து கொள்ள இருந்த நிலையில், அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வந்தது. ஆனால் அதன் பின் மழையின் காரணமாக மோசமான வானிலை நிலவியதால் மக்களின் பாதுகாப்பு கருதி இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. ரசிகர்கள் பலரும் வருத்தத்துடன் வீடு திரும்பினர்.

இந்நிலையில் தற்போது மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி, சென்னை ஈசிஆர் ஆதித்யராம் பேலஸ் சிட்டியில் வருகின்ற செப்டம்பர் 10ஆம் தேதி நடைபெற இருப்பதாக ஏ ஆர் ரகுமான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஏற்கனவே பெற்றிருந்த டிக்கெட்டுகளை பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

MUST READ