spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஇதுவும் கேரளாவுல தான்யா நடக்குது... பதிலடி கொடுத்த ஏஆர் ரகுமான்!

இதுவும் கேரளாவுல தான்யா நடக்குது… பதிலடி கொடுத்த ஏஆர் ரகுமான்!

-

- Advertisement -

இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் சமீபத்தில் ட்விட்டரில் பகிர்ந்துள்ள வீடியோ இணையத்தில் பதிலாகி வருகிறது.

தற்போது மலையாளத்தில் உருவாகிய கேரளா ஸ்டோரி என்ற திரைப்படம் தான் சினிமா வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. அந்தப் படத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் அல்லாத பெண்கள் முஸ்லிமாக மதம் மாற்றம் செய்யப்பட்டு ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு தீவிரவாத செயல்களுக்கு அனுப்பப்படுவதாக  கதைகளம் அமைக்கப்பட்டு உருவாகியுள்ளது.

we-r-hiring

இந்த படத்திற்கு பலத்த எதிர்ப்பு உருவாகியுள்ளது. இந்த படத்தில் கூறப்படுவதை உண்மை என நிரூபித்தால் ஒரு கோடி ரூபாய் சன்மானம் தருவதாக முஸ்லிம் லீக் அறிவித்துள்ளது. மேலும் இந்த படத்தை தமிழகத்தில் வெளியிட வேண்டாம் என்று உளவுத்துறை தமிழக அரசுக்கு எச்சரிக்கை கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் மூன்று வருடங்களுக்கு முன்பாக உள்ள ஒரு வீடியோவை தற்போது பகிர்ந்துள்ளார்.

அதில் கேரளாவை சேர்ந்த இந்து தம்பதியினருக்கு முஸ்லிம் மதத்தினர் பொருள் உதவி அளித்து திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த சம்பவம் மூன்று வருடங்களுக்கு முன்பு நடந்தது.

தற்போது இந்த வீடியோவை பகிர்ந்த ரகுமான் “இதுவும் கேரளாவில் நடக்கும் ஸ்டோரி தான். மனித குலத்தின் மீதான அன்பு நிபந்தனை அற்றதாக இருக்க வேண்டும்” என்று பகிர்ந்து உள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

MUST READ