சுந்தர். சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 படத்தின் மூன்று நாள் வசூல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.சுந்தர் சி இயக்கத்தில் ஏற்கனவே அரண்மனை 1, 2, 3 ஆகிய மூன்று பாகங்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக சுந்தர் சி, அரண்மனை 4 திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் கடந்த மே மாதம் 3ஆம் தேதி திரையிடப்பட்டது. இதில் சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா, கோவை சரளா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். காமெடி கலந்த ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் வெளியான இந்த படம் வெளியான முதல் நாளிலிருந்து பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஹிப் ஹாப் ஆதியின் இசை இந்த படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது. அந்த வகையில்
இந்த படத்தில் சிம்ரன் – குஷ்பூ இருவரும் நடனமாடிய பாடலும், தமன்னா – ராஷி கண்ணா ஆகியோர் நடனம் ஆடிய பாடலும் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படம் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதன்படி இரண்டு நாட்களில் 16 கோடி வசூலித்த அரண்மனை 4 திரைப்படம் மூன்று நாட்களில் உலகம் முழுவதும் 23 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இனிவரும் நாட்களிலும் இந்த படம் அதிக வசூலை வாரிக் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -