spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅஜித் ரசிகர்களே ரெடியா?.... மிக விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அஜித் ரசிகர்களே ரெடியா?…. மிக விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

-

- Advertisement -

அஜித்தின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என புதிய அப்டேட் கிடைத்துள்ளது.அஜித் ரசிகர்களே ரெடியா?.... மிக விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அல்டிமேட் ஸ்டார், தல என்று ஏராளமான ரசிகர்களால் கொண்டாடப்படும் அஜித் தற்போது நடிப்பதில் மட்டுமல்லாமல் கார் பந்தயத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் கார் பந்தயத்தில் தொடர் வெற்றிகளை கண்டு இந்தியாவிற்கு பெருமை சேர்த்து வருகிறார். இது தவிர கடந்த ஏப்ரல் மாதத்தில் இவரது நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது. அதேசமயம் இந்த படத்தின் கிளைமாக்ஸில் ஏகே 64 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கப் போகிறார் என்று ஹின்ட் கொடுக்கப்பட்டிருந்தது. அது மட்டும் இல்லாமல் அஜித் – ஆதிக் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கப் போவதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் இந்த படமானது குட் பேட் அக்லி படத்தின் இரண்டாம் பாகமாக இருக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அஜித் ரசிகர்களே ரெடியா?.... மிக விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!இந்நிலையில் ஏகே 64 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என லேட்டஸ்ட் அப்டேட் வெளிவந்துள்ளது. இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் இப்பொழுதே கொண்டாட தயாராகி வருகிறார்கள். அடுத்தது இனிவரும் நாட்களில் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த விவரங்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ