சிம்பு படத்தின் புதிய அப்டேட் மிக விரைவில் வெளியாக இருக்கிறது.
தமிழ் சினிமாவில் சிறுவயதிலிருந்தே நடிப்பதில் ஆர்வம் கொண்ட சிம்பு தனக்கென ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருக்கிறார். இவர், கடைசியாக மணிரத்தினத்தின் ‘தக் லைஃப்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியானாலும் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதே சமயம் நடிகர் சிம்பு, ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் STR 49, தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் STR 50, அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் STR 51 ஆகிய படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி இருந்தார். இந்த மூன்று படங்களின் அறிவிப்பும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. எனவே ‘தக் லைஃப்’ படத்திற்கு பின்னர் நடிகர் சிம்பு, ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென சிம்பு எடுத்த அதிரடி முடிவால், வெற்றிமாறன் தான் சிம்புவின் அடுத்த படத்தை இயக்க உள்ளார் என சமீப காலமாக பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதன்படி சமீபத்தில் ‘பேட் கேர்ள்’ பட விழாவில் கலந்து கொண்ட வெற்றிமாறன் இன்னும் சில நாட்களில் தன்னுடைய அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறியிருந்தார். மேலும் ‘வட சென்னை’ படத்திற்காக தயார் செய்து வைத்திருந்த ஒரிஜினல் கதையை தான் சிம்புவிற்காக கொண்டுவர இருக்கிறேன் எனவும் கூறியுள்ளார். இந்நிலையில் சிம்பு – வெற்றிமாறன் கூட்டணியின் புதிய படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில், அதாவது இன்று (செப்டம்பர் 4) வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் இப்பொழுதே கொண்டாட தயாராகி விட்டார்கள்.