அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியிடப்பட்டுள்ளது.
அர்ஜுன் தாஸ் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவராவார். இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் வில்லனாக தடித்து பிரபலமானவர். தற்போது கதாநாயகனாக புட்ட பொம்மா மற்றும் அநீதி திரைப்படத்தில் நடித்திருந்தார். அநீதி திரைப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்நிலையில் மற்றொரு புதிய படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை மௌனகுரு மற்றும் மகாமுனி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய சாந்தகுமார் இயக்குகிறார். டி என் ஏ மெக்கானிக் நிறுவனம் மற்றும் சரஸ்வதி சினி கிரியேஷன்ஸ் நிறுவனங்களின் சார்பில் சாந்தகுமார் தயாரித்துள்ளார். தமன் இசையமைத்துள்ளார்.
இதில் அர்ஜுன் தாஸ் உடன் இணைந்து தான்யா ரவிச்சந்திரன், ரம்யா , ஜி எம் சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. அந்தப் போஸ்டருடன் ‘ரசவாதி‘ என்ற தலைப்பும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அர்ஜுன் தாஸ் தான்யா ரவிச்சந்திரனுக்கு ஆறுதல் சொல்வது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்படம் ஒரு வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி இருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும்
இப்படம் விரைவில் வெளியாக இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.