அர்ஜுன் தாஸின் ‘பாம்‘ பட ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் பாம். இந்த படத்தில் அர்ஜுன் தாஸுடன் இணைந்து சிவாத்மிகா, காளி வெங்கட், நாசர், அபிராமி, சிங்கம்புலி, பால சரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தை இயக்கிய விஷால் வெங்கட் இயக்கியுள்ளார். ஜெம்ப்ரியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுதா சுகுமார் மற்றும் சுகுமார் பாலகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து இந்த படத்தை தயாரித்திருக்கின்றனர். டி. இமான் இந்த படத்தின் இசையமைப்பாளராகவும் ராஜ்குமார் இப்படத்தின் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளனர். ஜிகே பிரசன்னா இதன் எடிட்டிங் பணிகளை கவனித்துள்ளார். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் டைட்டில் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதைத் தொடர்ந்து இந்த படத்தில் இருந்து ‘இன்னும் எத்தனை காலம்’ எனும் பாடல் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலானது. இதற்கிடையில் ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் இந்த படமானது 2025 செப்டம்பர் மாதம் திரைக்கு வரும் என படக்குழு அறிவித்து இருந்தது. அதன்படி இப்படம் செப்டம்பர் 12ஆம் தேதி திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.