- Advertisement -
விடாமுயற்சி படப்பிடிப்பு தளத்தில் அப்படத்தின் கலை இயக்குநர் மிலன் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதனால், திரையுலகமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
ஆர்யா நடித்து கடந்த 2006-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் கலாப காதலன். இப்படத்தின் மூலம் சினிமாவுக்கு கலை இயக்குநராக அறிமுகமானவர் மிலன். பின்னர் ஓரம்போ படத்தில் பணியாற்றிய அவருக்கு அடுத்ததாக அஜித் படத்தில் இணையும் வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் திரைப்படத்திலும் மிலன் இணைந்து பணியாற்றினார். கலை இயக்குநராக சினிமாவில் பிரபலமும் அடைந்தார்.


தற்போது, மகிழ்திருமேனி இயத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு அஜர்பைஜானில் தொடங்கியது. படப்பிடிப்புக்காக அஜித் மட்டுமன்றி த்ரிஷா உள்ளிட்ட படக்குழுவினரும் அஜர்பைஜான் பறந்தனர். கலை இயக்குநர் மிலனும் அவர்களுடன் அஜர்பைஜான் சென்றிருந்தார்.


