அருள்நிதி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு ப்ரோமோ வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அருள்நிதி. இவரது நடிப்பில் வெளியான இரவுக்கு ஆயிரம் கண்கள், டைரி, டிமான்ட்டி காலனி 1 மற்றும் 2 ஆகிய படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. கடைசியாக இவருடைய நடிப்பில் ‘ராம்போ’ திரைப்படம் வெளியானது. அடுத்தது ‘டிமான்ட்டி காலனி 3’ திரைப்படமும் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் இவர், ‘என்னங்க சார் உங்க சட்டம்’ படத்தின் இயக்குனர் பிரபு ஜெயராம் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனமும், கோல்ட்மைன் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. வெற்றிவேல் மகேந்திரன் இதன் ஒளிப்பதிவாளராக பணியாற்ற நிவாஸ் கே பிரசன்னா இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் அருள்நிதியுடன் இணைந்து மம்தா மோகன்தாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் அருண்பாண்டியனும் இப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு மை டியர் சிஸ்டர் என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான டைட்டில் ப்ரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த ப்ரோமோவை பார்க்கும் போது இந்த படமானது அக்கா – தம்பி உறவை மையமாக வைத்து கிராமத்து பின்னணியில் எடுக்கப்பட்டிருப்பது போல் தெரிகிறது. வேடிக்கை நிறைந்த இந்த ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


