நடிகர் அருள்நிதி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். வித்தியாசமான கதைக்களங்களில் நடித்து வரும் இவர் பல வெற்றி படங்களை தந்துள்ளார். அந்த வகையில் கடந்த 2015 ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம் டிமான்ட்டி காலனி. இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியிருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பல வருடங்கள் கழித்து தற்போது டிமான்ட்டி காலனி 2 திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், அருண் பாண்டியன், மீனாட்சி சௌந்தராஜன், விஜே அர்ச்சனா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஹாரர் கதை களத்தில் உருவாகி இருக்கும் இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு திரைக்கு வர இருக்கிறது. ஏற்கனவே இந்த படத்தின் டீசர், ட்ரெய்லர், ஃப்ரீ ரிலீஸ் ட்ரெய்லர் என அடுத்தடுத்து வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக தூண்டியுள்ளது. இந்நிலையில் அருள்நிதி, டிமான்ட்டி காலனி மூன்றாம் பாகம் மற்றும் நான்காம் பாகம் குறித்து சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசி உள்ளார்.
“Story ready for DC till part-4, Based on the success of #DemonteColony2, part-3 will be taken. DC2 was first supposed to be directed by Ajay’s associate, then later changed. In part-1 protagonist character got died, there is a connect for it in part-2″ pic.twitter.com/AdWeC28P9E
— AmuthaBharathi (@CinemaWithAB) August 13, 2024
அவர் கூறியதாவது, “டிமான்ட்டி காலனி 4 வரைக்கும் கதை தயாராக இருக்கிறது. டிமான்ட்டி காலனி 2 படத்தின் வெற்றியை பொறுத்து இதன் மூன்றாம் பாகம் உருவாக்கப்படும். டிமான்ட்டி காலனி 2 படத்தை தான் உருவாக்க முதலில் திட்டமிட்டோம். அதை அஜய் ஞானமுத்துவின் நண்பர்களை வைத்து உருவாக்குவோம் என்ற போது, மற்ற அனைவரும் இந்த படத்தை அஜய் ஞானமுத்துவே இயக்கினால் நன்றாக இருக்கும் என்று சொன்னார்கள். அதன் பிறகு மாற்றப்பட்டது. டிமான்ட்டி காலனி முதல் பாகத்தில் ஹீரோ இறந்து விடுவார். அதிலிருந்து தான் இரண்டாம் பாகம் தொடர்பு படுத்தப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.