அருண் விஜய் நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அருண் விஜய் தடம் படத்தின் வெற்றிக்கு பிறகு பிஸியான நடிகராக மாறிவிட்டார். அந்த வகையில் இவர் சினம், யானை உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து ஏ எல் விஜய் இயக்கத்தில் மிஷன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதேசமயம் வணங்கான் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தை சேது, நந்தா, நான் கடவுள், அவன் இவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய பாலா இயக்குகிறார்.
இந்நிலையில் தனது அடுத்த படத்தை இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இயக்குனர் முத்தையா குட்டி புலி, மருது, தேவராட்டம், விருமன் உள்ளிட்ட படங்களின் இயக்குனர் ஆவார்.
சமீபத்தில் ஆர்யாவின் நடிப்பில் காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் திரைப்படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் முத்தையா முதன்முறையாக அருண் விஜய் உடன் இணைந்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். இந்த புதிய படத்தை 7 ஜி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. மேலும் தற்போது படத்தின் பிரீ புரொடக்ஷன் பணிகள் ஆரம்பித்துவிட்டது என்றும் படப்பிடிப்புகள் செப்டம்பர் மாதம் தொடங்க இருப்பதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.