- Advertisement -
திரைப்படத்தில் டூப் இல்லாமல் மாடுபிடி வீரராக நடிக்க ஆசை என்று நடிகர் அருண் விஜய் தெரிவித்துள்ளார்.

விஜயகுமாரின் மகனும், நடிகருமான அருண் விஜய் திரைத்துறையில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். தடம் படத்தின் வெற்றிக்கு பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. சினம், யானை உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். யானை படத்தை ஹரி இயக்கினார். இதைத் தொடர்ந்து வணங்கான் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தை சேது, நந்தா, நான் கடவுள், அவன் இவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய பாலா இயக்குகிறார்.


இதனிடையே அருண் விஜய் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் திரைப்படம் மிஷன் சேப்டர் 1. மலையாள நடிகை நிமிஷா சஜயனும் இந்தப் படத்தில் நடித்துள்ளார். எமி ஜாக்சன் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஏ.எல்.விஜய்யின் ‘மதராசப்பட்டினம்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான எமி ஜாக்கன், 5 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடித்துள்ளார். இத்திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.



