Homeசெய்திகள்சினிமாஆக்சன் காட்சிகளில் மிரட்டும் அருண் விஜய்.... 'மிஷன் சாப்டர் 1' விமர்சனம்!

ஆக்சன் காட்சிகளில் மிரட்டும் அருண் விஜய்…. ‘மிஷன் சாப்டர் 1’ விமர்சனம்!

-

ஆக்சன் காட்சிகளில் மிரட்டும் அருண் விஜய்.... 'மிஷன் சாப்டர் 1' விமர்சனம்!அருண் விஜய் நடிப்பில் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள படம் தான் மிஷன் சாப்டர் 1. இந்த படத்தில் அருண் விஜயுடன் இணைந்து எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அருண் விஜய் தன் மகளின் அறுவை சிகிச்சைக்காக தனது வேலையை விட்டுவிட்டு தன் மகளுடன் லண்டனுக்கு செல்கிறார். அங்கு மருத்துவமனையில் ஏற்படும் ஒரு பிரச்சனையால் அருண் விஜய் அடிதடியில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்பட்டு விடுகிறது. அந்த சமயத்தில் அருண் விஜய் போலீஸ் அதிகாரியை அடித்து விடுகிறார். அதனால் அவரை கைது செய்து ஜெயிலில் அடைத்து விடுகின்றனர். அதன் பின் படம் முழுக்க ஜெயிலில் நடப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது. கடைசியாக அருண் விஜய் ஜெயிலில் இருந்து வெளியேறி தனது மகளை எப்படி காண்கிறார் என்பதே படத்தின் முழு நீள கதையாகவும்.ஆக்சன் காட்சிகளில் மிரட்டும் அருண் விஜய்.... 'மிஷன் சாப்டர் 1' விமர்சனம்!

நீண்ட நாட்களாக ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்ட இயக்குனர் ஏ.எல்.விஜய்யும், தடம், தடையற தாக்க, குற்றம் 23 உள்ளிட்ட வெற்றி படங்களை கொடுத்த அருண் விஜயும் இணைந்துள்ள மிஷன் சாப்டர் 1 படம் ஆரம்பத்திலிருந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்தது. அதன்படி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இப்படத்தின் முதல் பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு படமானது வேகம் எடுத்து சுவாரசியமாக செல்கிறது. இரண்டாம் பாதியில் ஒரே ஜெயிலை அடிக்கடி காட்டுவதினால் சற்று சோர்வுற
செய்கிறது. இருந்த போதிலும் முதல் பாதியைப் போல இரண்டாம் பாதியையும் சுவாரசியமாக நகர்த்த முயற்சித்துள்ளார்கள். ஆக்சன் காட்சிகளில் மிரட்டும் அருண் விஜய்.... 'மிஷன் சாப்டர் 1' விமர்சனம்!இப்படத்தில் தேவையில்லாத காமெடி, பாடல், வசனங்கள் என எதுவும் தேவையற்ற இடங்களில் இடம்பெறவில்லை. பிளாஷ்பேக்கை அதிகம் இழுக்காமல் குறுகிய நேரத்திலேயே முடித்திருப்பது படத்திற்கு பிளஸ்ஸாக அமைந்துள்ளது. அருண் விஜய் ஆக்சன் காட்சிகளில் மிரட்டி இருக்கிறார். இருந்த போதிலும் இரண்டாம் பாதியில் உள்ள சில தொய்வுகளை சரி செய்திருந்தால் படம் பாக்ஸ் ஆபிஸில் சம்பவம் செய்திருக்கும். ஆயினும் குடும்பத்துடன் சென்று பார்த்து ரசிக்கும் படம் தான் மிஷன் சாப்டர் 1.

MUST READ