Homeசெய்திகள்சினிமாஅருண் விஜய் நடிக்கும் 'ரெட்ட தல'..... இன்று தொடங்கும் படப்பிடிப்பு!

அருண் விஜய் நடிக்கும் ‘ரெட்ட தல’….. இன்று தொடங்கும் படப்பிடிப்பு!

-

நடிகர் அருண் விஜய் கடைசியாக ஏஎல் விஜய் இயக்கத்தில் வெளியான மிஷன் சாப்டர் 1 திரைப்படத்தில் நடித்திருந்தார். அருண் விஜய் நடிக்கும் 'ரெட்ட தல'..... இன்று தொடங்கும் படப்பிடிப்பு!இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதேசமயம் அருண் விஜய் வணங்கான் எனும் திரைப்படத்தையும் கைவசம் வைத்துள்ளார். அதைத்தொடர்ந்து அருண் விஜய் மான் கராத்தே பட இயக்குனர் திருக்குமரன் இயக்கத்தில் ரெட்ட தல எனும் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தினை பிடிஜி யுனிவர்சல் நிறுவனத்தின் சார்பில் பாபி பாலச்சந்திரன் தயாரிக்க சாம் சி எஸ் இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் அருண் விஜய் உடன் இணைந்து தான்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலரும் நடிக்க உள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்த படத்தின் பூஜை தொடங்கப்பட்டதை தொடர்ந்து படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் பட குழுவினர் வெளியிட்டு கவனம் ஈர்த்தனர்.

அதன்படி இந்த படத்தில் நடிகர் அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். ஏற்கனவே தடம் படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அடுத்ததாக அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்க இருக்கும் தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்க இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

MUST READ