Homeசெய்திகள்சினிமாபொங்கல் ரேஸில் இணைந்த அருண் விஜயின் மிஷன்.... வெளியானது அறிவிப்பு!

பொங்கல் ரேஸில் இணைந்த அருண் விஜயின் மிஷன்…. வெளியானது அறிவிப்பு!

-

பொங்கல் ரேஸில் இணைந்த அருண் விஜயின் மிஷன்.... வெளியானது அறிவிப்பு!அருண் விஜய் தற்போது பல படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி வருகிறார். அந்த வகையில் பாலா இயக்கி வரும் வணங்கான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதேசமயம் ஏ எல் விஜய் இயக்கியுள்ள மிஷன் திரைப்படத்திலும் நடித்துள்ளார் அருண் விஜய்.  இதில் அருண் விஜய் உடன் இணைந்து எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் முழுக்க முழுக்க லண்டனில் படமாக்கப்பட்டுள்ளது. மேலும் தனது மகளின் அறுவை சிகிச்சைக்காக செல்லும் அருண் விஜயை ஏதோ ஒரு காரணத்திற்காக சிறையில் அடைகின்றனர். அங்கிருந்து எப்படி தப்பித்து தன் மகளிடம் செல்கிறார் என்பதே படத்தின் கதை என்று கூறப்படுகிறது.

லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுபாஸ்கரன், ராஜசேகர் சுவாதி ஆகியோர் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் அதைத் தொடர்ந்து டீசரும் வெளியாகி கவனம் பெற்றது.
பொங்கல் ரேஸில் இணைந்த அருண் விஜயின் மிஷன்.... வெளியானது அறிவிப்பு!மிஷன் சாப்டர் 1 அச்சம் என்பது இல்லையே இன்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக இருப்பதாக பட குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

MUST READ