தனுஷ் நடிக்கும் இளையராஜா பயோபிக்… படத்தில் அட்டகாசமான குத்துப்பாடல்…
- Advertisement -
இசைஞானி இளையராஜா வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் குத்துப்பாடல் இடம்பெற உள்ளதாக தகவல் வௌியாகி உள்ளது. 
1976-ம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் இசை அமைப்பாளராக கோலிவுட் திரையுலகில் அறிமுகமானவர் இளையராஜா. சுமார் ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் இன்று வரை இசை அமைத்திருக்கிறார். இன்றும் அவரது இசை அமைப்பில் உருவாகும் திரைப்படங்களுக்கு மொழிகளைத் தாண்டி பல கோடி ரசிகர்கள் உள்ளனர். அவர் இசை அமைப்பு மட்டுமன்றி பல பாடல்களை பாடியும் இருக்கிறார். இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரின் விருப்ப பாடல்களில் இளையராஜாவின் இசை நிச்சயம் இடம்பெற்றிருக்கும்.

இசைக்கு ஞானி என்று போற்றப்படும் இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. இளையராஜா என்ற பெயரில் உருவாகும் இத்திரைப்படத்தில், தனுஷ் நாயகனாக நடிக்கிறார். இத்திரைப்படத்தை பிரபல முன்னணி இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில், அதற்கான முன்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இளையராஜா பயோபிக் திரைப்படத்தில் ஒரு அதிரடி குத்துப்பாடல் இடம்பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் பிரபல நடிகை நடனமாட இருப்பதாகவும் , விரைவில் இது தொடர்பான தகவல் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.