Homeசெய்திகள்சினிமாஆர்யா - கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும் 'மிஸ்டர் எக்ஸ்'.... ரிலீஸ் குறித்த தகவல்!

ஆர்யா – கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும் ‘மிஸ்டர் எக்ஸ்’…. ரிலீஸ் குறித்த தகவல்!

-

- Advertisement -

மிஸ்டர் எக்ஸ் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.ஆர்யா - கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும் 'மிஸ்டர் எக்ஸ்'.... ரிலீஸ் குறித்த தகவல்!

தமிழ் சினிமாவில் நான் கடவுள், மதராசபட்டினம், ராஜா ராணி ஆகிய வெற்றி படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ஆர்யா. அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம் பெரிய அளவில் பேசப்பட்டது. அடுத்தது இவர் பா. ரஞ்சித் இயக்கத்தில் வேட்டுவம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் இவர் எஃப் ஐ ஆர் படத்தின் இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் மிஸ்டர் எக்ஸ் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் ஆர்யாவுடன் இணைந்து கௌதம் ராம் கார்த்திக், மஞ்சு வாரியர், சரத்குமார், அனகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க திபு நினன் தாமஸ் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். அருள் வின்செட் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். ஆர்யா - கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும் 'மிஸ்டர் எக்ஸ்'.... ரிலீஸ் குறித்த தகவல்!ஸ்பை திரில்லர் ஜானரில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்தவிட்டது. அடுத்தது இந்த படத்தில் இருந்து டீசரும், அடுத்தடுத்த பாடல்களும் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தை 2025 மே மாதத்தில் திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டு வருவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ