spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபாக்ஸிங் பயிற்சியில் ஆர்யா... வெறித்தனமான வீடியோ வைரல்...

பாக்ஸிங் பயிற்சியில் ஆர்யா… வெறித்தனமான வீடியோ வைரல்…

-

- Advertisement -
கோலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகர் ஆர்யா. அவர் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. பா ரஞ்சித் இத்திரைப்படத்தை இயக்கியிருப்பார். குத்துச்சண்டையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படம் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி-யில் வெளியானது. அந்தப் படத்தில் ஆர்யாவுடன் துஷாரா விஜயன்,பசுபதி, ஜான் கொக்கேன், முத்து குமார், சந்தோஷ் பிரதாப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருந்தார்.

இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் இத்திரைப்படம் ஆர்யாவின் திரைவாழ்வில் ஒரு மைல்கல்லாக அமைந்தது. இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு சார்பட்டா இரண்டாம் பாகம் இயக்கப்படும் என்று படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. இப்படத்திற்கான பணிகளும் ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வந்தன. படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில், சார்பட்டா இரண்டாம் பாகத்திற்காக நடிகர் ஆர்யா தயாராகி வரும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. வெறித்தனமாக ஆர்யா உடற்பயிற்சி மற்றும் பாக்ஸிங் பயிற்சி  செய்யும் காணொலியை பகிர்ந்துள்ளார். இதனால் ரசிகர்கள் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என உற்சாகத்தில் உள்ளனர்.

MUST READ