விஜய் நடிப்பில் உருவாகியிருந்த கோட் திரைப்படம் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கிட்டத்தட்ட 430 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. அதைத் தொடர்ந்து விஜய் தனது 69ஆவது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். முழு நேர அரசியல்வாதியாக மாற இருக்கும் விஜயின் கடைசி படம் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி தளபதி 69 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தினை ஹெச். வினோத் இயக்க கே வி என் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் படத்தினை தயாரிக்கிறது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைப்பாளராக கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தில் விஜயுடன் இணைந்து பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ்ராஜ், கௌதம் மேனன், நரேன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சமீபத்தில் தான் இந்த படத்தின் பூஜை நடத்தப்பட்டு அதைத்தொடர்ந்து படப்பிடிப்புகளும் நடைபெற்று வருகின்றன. அதாவது விஜய் மற்றும் பூஜா ஹெக்டே ஆகிய இருவருக்குமான பிரம்மாண்ட பாடல் காட்சியுடன் இந்த படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
அதேசமயம் இந்த பாடலுக்கு சேகர் மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றுகிறார் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் இந்தப் பாடல் வரிகளை அசல் கோலார் எழுதி இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமில்லாமல் ‘ஒன் லாஸ்ட் சாங்’ என்பதுதான் இந்த பாடலின் தலைப்பு என்றும் புதிய அப்டேட் கிடைத்துள்ளது. விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று நம்பப்படுகிறது.
அசல் கோலார் ஏற்கனவே லியோ படத்தில் இடம்பெற்ற ‘நான் ரெடி தான் வரவா’ இப்பாடலை பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.