அசோக் செல்வன் நடிக்கும் புதிய படத்தின் ஸ்பெஷல் வீடியோ வெளியாகி உள்ளது.
நடிகர் அசோக் செல்வன் தமிழ் சினிமாவில் சூது கவ்வும், தெகிடி, ஓ மை கடவுளே ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். இவருடைய நடிப்பில் வெளியான போர் தொழில், சபாநாயகன், ப்ளூ ஸ்டார் ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றி படங்களாக அமைந்தது. கடைசியாக இவர், தக் லைஃப் திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். அதன் பின்னர் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனமும், வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் அசோக் செல்வன். இது தவிர இவர் ‘போர் தொழில்’ பட இயக்குனர் விக்னேஷ் ராஜாவின் கதையிலும், கார்த்திக் ராமகிருஷ்ணனின் இயக்கத்திலும் உருவாகும் புதிய படத்தில் நடித்து வருவதாக ஏற்கனவே தகவல் கசிந்தது. அதன்படி இப்படத்தின் படப்பிடிப்புகள் மூணாறு போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
This Deepavali, we’re sharing a little more about something very close to our hearts 💫 After all the love you’ve showered on Oh My Kadavule, we’re thrilled to bring you our next project — #AshokSelvan23 ✨ pic.twitter.com/yHF0LsCoTy— Happy High Pictures (@HappyHighPic) October 20, 2025

இந்நிலையில் இன்று (அக்டோபர் 20) தீபாவளி தின ஸ்பெஷலாக புதிய வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை பார்க்கும்போது இந்த படமானது காதல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி வருவது போல் தெரிகிறது. மேலும் இந்த வீடியோவில் இந்த படத்தின் அப்டேட் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் நடிக்கிறார். ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.