Homeசெய்திகள்சினிமாஅசோக் செல்வனின் எமக்குத் தொழில் ரொமான்ஸ்... டீசர் வெளியீடு ...

அசோக் செல்வனின் எமக்குத் தொழில் ரொமான்ஸ்… டீசர் வெளியீடு …

-

அசோக் செல்வன் நடிப்பில் உருவாகி இருக்கும் எமக்குத் தொழில் ரொமான்ஸ் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

அசோக் செல்வன் நடிப்பில் அண்மையில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ப்ளூ ஸ்டார். பா ரஞ்சித் தயாரிப்பில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. முன்னதாக அவரது நடிப்பில் வெளியான போர் தொழில் திரைப்படம் பலராலும் பாராட்டப்பட்டது. அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இறுதியாக சபா நாயகன் திரைப்படமும் வெளியானது. காதல், காமெடி என்ற கதைக்களத்தில் வௌியான இப்படமும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், அசோக் செல்வன் அடுத்ததாக நடித்திருக்கும் புதிய திரைப்படம் எமக்குத் தொழில் ரொமான்ஸ். இந்த படத்தை அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன் எழுதி இயக்குகிறார். படத்தில் அவந்திகா நாயகியாக நடிக்கிறார். படத்தில் ஊர்வசி, எம்எஸ் பாஸ்கர், அழகம் பெருமாள், பகவதி பெருமாள், விஜய் வரதராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் முதல் தோற்றத்தை நடிகர் ஆர்யா வெளியிட்டிருந்தார்.

ரொமான்ஸ் மற்றும் காதல் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தின் முதல் தோற்றம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக படத்தின் டீசரும் தற்போது இணையதளத்தில் வெளியாகி உள்ளது. கலகலப்பாக வெளியாகி இருக்கும் படத்தின் டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ