இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து, சிம்பு குறித்து பேசி உள்ளார்.நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஸ்டார் நடிகராக வலம் வருபவர். இவரது நடிப்பில் தற்போது தக் லைஃப் திரைப்படம் உருவாகி இருக்கும் நிலையில் இதைத்தொடர்ந்து ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் STR 49, தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் STR 50, அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் STR 51 ஆகிய அடுத்தடுத்த படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. இந்நிலையில் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து, நடிகர் சிம்பு குறித்து சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
அதாவது அஸ்வத் மாரிமுத்து, ஓ மை கடவுளே படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் டிராகன் எனும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் வருகின்ற பிப்ரவரி 21ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கான ப்ரோமோஷன் பணிகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதே சமயம் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த பாடல்களும் ட்ரெய்லரும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் இடம்பெற்ற ஏன்டி விட்டுப் போன எனும் பாடலை நடிகர் சிம்பு பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Dir #AshwathMarimuthu Recent Interview
– #SilambarasanTR sir is not interested to sing a breakup song
– But after hearing the song he come and sing the song #dragonpic.twitter.com/IaXmBXKBoH— Movie Tamil (@MovieTamil4) February 12, 2025
இது தொடர்பாக பேசிய அஸ்வத் மாரிமுத்து, “நடிகர் சிம்பு முதலில் பிரேக் அப் பாடலை பாடுவதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அதன் பின்னர் அந்தப் பாடலின் பின்னணி இசையை நான் அவருக்கு அனுப்பினேன். அதைக் கேட்ட பின் அந்த பாடலைப் பாட ஒப்புக்கொண்டார் சிம்பு. என்னுடன் அடுத்த படம் பண்ணப் போகிறார் என்பதற்காக இந்த பாடலை அவர் பாடவில்லை. மியூசிக் நன்றாக இருந்தது. அது அவருக்கு பிடித்ததால் இந்த பாடலை பாடினார். அதுமட்டுமில்லாமல் பிரதீப் ரங்கநாதன் ஒரு ஹீரோவாக உயர்ந்த நிலையை அடைய அவர் ஆதரவு தருகிறார்” என்று தெரிவித்துள்ளார்.