spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅதர்வா நடிக்கும் 'தணல்' படத்தின் முக்கிய அப்டேட்!

அதர்வா நடிக்கும் ‘தணல்’ படத்தின் முக்கிய அப்டேட்!

-

- Advertisement -

அதர்வா நடிக்கும் தணல் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.அதர்வா நடிக்கும் 'தணல்' படத்தின் முக்கிய அப்டேட்!

தமிழ் சினிமாவில் ‘பாணா காத்தாடி’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான அதர்வா, பரதேசி, 100 போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இவரது நடிப்பில் கடைசியாக ‘டிஎன்ஏ’ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதே சமயம் இவர், சிவகார்த்திகேயன் – சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகும் ‘பராசக்தி’ திரைப்படத்தில் நடிக்கிறார். இதற்கிடையில் இவர், தணல் எனும் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தை அன்னை ஃபிலிம் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்க ரவீந்திர மாதவா எழுதி, இயக்கியுள்ளார். இந்த படத்தில் அதர்வாவுடன் இணைந்து லாவண்யா திரிபாதி, அஸ்வின் காக்குமானு, அழகம்பெருமான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். சக்தி சரவணன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில், இதன் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதாவது திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் நடிகர் அதர்வா, போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார்.அதர்வா நடிக்கும் 'தணல்' படத்தின் முக்கிய அப்டேட்! ஏற்கனவே இவர் 100, ட்ரிக்கர் ஆகிய படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ‘தணல்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்து வருகிறது. மேலும் இந்த படம் வருகின்ற செப்டம்பர் 12ஆம் தேதி திரைக்கு வரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தை தமிழ்நாட்டில் ராது இன்ஃபோடைன்மென்ட் நிறுவனம் வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

MUST READ