Homeசெய்திகள்சினிமாஅதர்வா நடிக்கும் புதிய படம்.... தமிழில் அறிமுகமாகும் தெலுங்கு நடிகை!

அதர்வா நடிக்கும் புதிய படம்…. தமிழில் அறிமுகமாகும் தெலுங்கு நடிகை!

-

- Advertisement -

அதர்வா நடிக்கும் புதிய படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் கிடைத்துள்ளது.அதர்வா நடிக்கும் புதிய படம்.... தமிழில் அறிமுகமாகும் தெலுங்கு நடிகை!நடிகர் அதர்வா கடந்த ஆண்டு வெளியான மத்தகம் என்ற வெப்தொடரில் நடித்திருந்தார். இதற்கிடையில் நிறங்கள் மூன்று எனும் திரைப்படத்திலும் நடித்திருந்தார். அடுத்ததாக டிஎன்ஏ எனும் புதிய படத்தில் நடித்திருக்கிறார் அதர்வா. சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் போஸ்டர் வெளியானது. இந்த படத்தை நெல்சன் வெங்கட் இயக்கியுள்ளார். இதில் அதர்வாவிற்கு ஜோடியாக நிமிஷா சஜயன் நடித்துள்ளார். இதில் அதர்வா இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இந்த படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து நடிகர் அதர்வா லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்குகிறார். சமீபத்தில் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. தற்போது இந்த படத்தின் கூடுதல் தகவல் என்னவென்றால் இதில் தெலுங்கு நடிகை நிஹாரிகா இணைந்துள்ளதாக புதிய அப்டேட் கிடைத்துள்ளது. அதர்வா நடிக்கும் புதிய படம்.... தமிழில் அறிமுகமாகும் தெலுங்கு நடிகை!நிஹாரிகா சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். அந்த வகையில் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருக்கிறார் நிஹாரிகா. மேலும் இவர், அதர்வா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம் இந்த படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ