Homeசெய்திகள்சினிமாஅட்லீ, விஜய் சேதுபதி கூட்டணியின் புதிய படம்..... விரைவில் தொடங்கும் படப்பிடிப்பு!

அட்லீ, விஜய் சேதுபதி கூட்டணியின் புதிய படம்….. விரைவில் தொடங்கும் படப்பிடிப்பு!

-

- Advertisement -

அட்லீ, விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகும் புதிய படம் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.அட்லீ, விஜய் சேதுபதி கூட்டணியின் புதிய படம்..... விரைவில் தொடங்கும் படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர் அட்லீ. இவர் கடைசியாக ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படத்தை இயக்கி இந்திய அளவில் பிரபலமானார். அதே சமயம் இவர் தொடர்ந்து பல படங்களை தயாரித்தும் வருகிறார். அந்த வகையில் ஏ ஃபார் ஆப்பிள் என்ற நிறுவனத்தின் சார்பில் விஜய் சேதுபதி நடிப்பில் புதிய படம் ஒன்றை தயாரிக்க இருக்கிறார் அட்லீ. இந்த படத்தினை ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ திரைப்படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் இயக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் கசிந்தது. மேலும் இந்த படமானது ஆக்சன் திரில்லர் ஜானரில் உருவாக போவதாகவும் சொல்லப்படுகிறது. தற்போது இப்படம் தொடர்பான கூடுதல் தகவல் கிடைத்துள்ளது. அட்லீ, விஜய் சேதுபதி கூட்டணியின் புதிய படம்..... விரைவில் தொடங்கும் படப்பிடிப்பு!அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்பு 2025 மார்ச் மாதம் தொடங்க இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் படக்குழு இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பினை தொடர்ந்து இரண்டு மாதங்கள் சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் இந்த படத்தை அட்லீயின் ஏ ஃபார் ஆப்பிள் நிறுவனம் மட்டுமல்லாமல் மற்றுமொரு பெரிய நிறுவனமும் இணைந்து தயாரிக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ