- Advertisement -
சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படத்திலிருந்து இரண்டாவது பாடல் வெளியாகி உள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் மாவீரன். தேசிய விருது வென்ற மடோன் அஸ்வின் இயக்கிய இத்திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதிதி ஷங்கர், சுனில், மிஷ்கின் ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர். படத்திற்கு பரத் ஷங்கர் இசை அமைத்திருந்தார். இப்படத்தை அடுத்து வெளியீட்டுக்கு தயார் ஆகியுள்ள திரைப்படம் அயலான். சிவகார்த்திகேயன் நடித்துள்ள இப்படத்தை ஆர்.ரவிக்குமார் இயக்கி உள்ளார். கடந்த 2018-ம் தொடங்கிய இப்படத்தை 24ஏஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்து உள்ளது. படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார்.
