இன்று நேற்று நாளை பட இயக்குனர் ஆர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் அயலான். சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் கடந்த ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியானது. இப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு பல தடைகளை தாண்டி 2024 இல் வெளியானது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயனின் 14 வது படமான இந்த படத்தை கே ஜே ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் சார்பில் ராஜேஷ் தயாரித்திருந்தார். இதற்கு இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார்.
படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் மற்றும் பலர் நடித்திருந்தனர். ஏலியன் ஒன்றை மையமாக வைத்து சயின்ஸ் பிக்சன் கலந்த பேண்டஸி படமாக உருவான இப்படம் ரிலீஸான முதல் நான்கு நாட்களில் உலக அளவில் 50 கோடியை தாண்டி வசூல் செய்தது. அந்த வகையில் குடும்பங்கள் கொண்டாடும் அயலான் திரைப்படம் மற்ற மாநிலங்களில் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அதே சமயம் ஏற்கனவே இந்த படத்தின் ஓடிடி உரிமத்தை பிரபல சன் நெக்ஸ்ட் நிறுவனம் கைப்பற்றியது.
Be ready for an exciting visit from space 👽#Ayalaan is all set to land worldwide exclusively on #SunNXT 👽 Wait for the updates @Siva_Kartikeyan @Rakulpreet @Ravikumar_Dir @arrahman#SivaKarthikeyan #ARRahman #SunNXTExclusiveAyalaan pic.twitter.com/RVl89rU0xb
— SUN NXT (@sunnxt) January 29, 2024
இந்நிலையில் கிட்டத்தட்ட நூறு கோடி வசூலை நெருங்கும் அயலான் திரைப்படம், விரைவில் ஓடிடிக்கு வர இருக்கிறது. இது சம்பந்தமான அறிவிப்பை சன் நெக்ஸ்ட் நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது.
மேலும் இப்படம் பிப்ரவரி 9 ஆம் தேதி ஓடிடியில் வெளியாகும் என சமீபத்தில் தகவல் கசிந்தது குறிப்பிடத்தக்கது.