- Advertisement -
அயலான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நாளை நடைபெற உள்ள நிலையில், துபாயில் முன்னோட்டம் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து தற்போது ஜொலித்துக் கொண்டிருக்கும் வளர்ந்து வரும் நாயகர்களில் ஒருவர் இவர். சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக வெளியான டான் மற்றும் மாவீரன் ஆகிய இரண்டு திரைப்படங்களும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றன. மடோன் அஸ்வின் இயக்கியிருந்த மாவீரன் படத்தில் மிஷ்கின், சுனில், அதிதி ஷங்கர் ஆகியோர் நடித்திருந்தனர்.
