சிவகார்த்திகேயன் மாவீரன் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 21 வது படத்தில் நடித்து வருகிறார். மேலும் தலைவர் 171 படத்திலும், ஏ ஆர் முருகதாஸ் இயக்க உள்ள புதிய படத்திலும் நடிப்பதற்கு கமிட்டாகி உள்ளார். இதற்கிடையில் கடந்த 2017இல் அய்லான் என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார் சிவகார்த்திகேயன். இந்த படத்தை 24 ஏ எம் நிறுவனம் மற்றும் கே ஜே ஆர் ஸ்டூடியோ நிறுவனம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. ஆர் ரவிக்குமார் இசை ஆர் ரவிக்குமார் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இதில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், இஷா கோபிகர், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சயின்ஸ் பிக்சன் கதை களத்தில் உருவாகியுள்ள இப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு 2024 ஜனவரி 12 ஆம் தேதி ரிலீஸாக முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதற்கான வேலைகளும் மும்மரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அயலான் படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா வருகின்ற டிசம்பர் 26 அன்று நடைபெற இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தது. அதன்படி இவ்விழா சென்னை, தாஜ் கோரமண்டலில் மாலை 6 மணி முதல் 9 மணி வரை நடைபெற இருப்பதாக படக்குழுவினர்கள் அறிவித்துள்ளனர்.
- Advertisement -