பேபி கேர்ள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
நிவின் பாலி நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் பேபி கேர்ள். இந்த படத்தில் லிஜோமோல் ஜோஸ், சங்கீத் பிரதாப், அதிதி ரவி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தை அருண் வர்மா இயக்க மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. பாபி மற்றும் சஞ்சய் ஆகிய இருவரும் எழுதியுள்ளனர். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் திருவனந்தபுரம், கொச்சி போன்ற பகுதிகளில் நடத்தப்பட்டது. இந்நிலையில் இன்று (செப்டம்பர் 5) ஓணம் பண்டிகையை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும், மோஷன் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த போஸ்டரை பார்க்கும்போது இந்த படமானது திரில்லர் ஜானரில் எடுக்கப்பட்டிருக்கும் போல் தெரிகிறது. மேலும் இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருவதோடு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.
இது தவிர நிவின் பாலி, ஏழு கடல் ஏழு மலை, டியர் ஸ்டுடென்ட்ஸ் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்த இரண்டு படங்களும் அடுத்தடுத்து திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தது நிவின் பாலி, ராகவா லாரன்ஸின் பென்ஸ் படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.