- Advertisement -
பஹிரா படத்திலிருந்து புதிய பாடல் வெளியீடு
பிரபுதேவா நடிப்பில் உருவாகியிருக்கும் பஹிரா படத்திலிருந்து புதிய பாடல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பஹிரா. இப்படத்தில் பிரபுதேவா நாயகனாகவும், அமைரா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி ஐயர், சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி சங்கர், சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால் ஆகியோர் முக்கிய கதாநாயகிகளாகவும் நடித்துள்ளனர். கணேசன் ஐயர் சேகர் படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது குச் குச் ஹோத்தா ஹை என்ற புதிய பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடல் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. பஹிரா திரைப்படம் மார்ச் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.