- Advertisement -
பாகுபலி மூன்றாம் பாகம் விரைவில் உருவாகும் என்று இயக்குநர் எஸ்எஸ் ராஜமௌலி தெரிவித்துள்ளார்.

கடந்த 2015-ம் ஆண்டு ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பிப் பார்க்க வைத்த திரைப்படம் பாகுபலி. இப்படத்தை பிரம்மாண்டத்திற்கு என்றே பெயர்போன ராஜமௌலி இயக்கி இருந்தார். அவருக்கு கிடைத்த அடைச்சொல்லுக்கு ஏற்ப பாகுபலி திரைப்படத்தையும் மாபெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக இயக்கினார். இத்திரைப்படத்தில் பிரபாஸ் நாயகனாக நடிக்க அவருக்கு சரிக்கு சமமான வில்லனாக ராணா டகுபதி நடித்திருந்தார். மேலும், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, நாசர், அனுஷ்கா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியிருந்தனர்.


இத்திரைப்படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசை அமைத்திருந்தார். இத்திரைப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஆங்கிலம், இந்தி என பல மொழிகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது. வசூலையும் வாரிக் குவித்தது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து பாகுபலி இரண்டாம் பாகம் உருவானது. இத்திரைப்படம் 2017-ம் ஆண்டு திரையரங்குகளில் வௌியானது. முதல் பாகத்தில் அதே நடிகர்கள் இரண்டாம் பாகத்திலும் நடித்திருந்தனர். இத்திரைப்படமும் சுமார் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலைக் குவித்து வரலாற்று சாதனை புரிந்தது.

