வணங்கான் படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அருண் விஜய் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் மிஷன் சாப்டர் 1. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. தற்போது அருண் விஜய், ரெட்ட தல எனும் படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் இவர் இயக்குனர் பாலா இயக்கத்தில் வணங்கான் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் அருண் விஜய் உடன் இணைந்து ரோஷினி பிரகாஷ், சமுத்திரகனி, மிஸ்கின் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்தை வி ஹவுஸ் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்க ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆர் பி குருதேவ் படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து தற்போது படமானது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.
அதன்படி சில தினங்களுக்கு முன்பாக வணங்கான் திரைப்படம் ஜூலை மாதத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. அதைத்தொடர்ந்து இதன் டீசரும் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் வருகின்ற ஜூலை 8-ம் தேதி மாலை 6 மணி அளவில் வெளியாகும் என்று படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.


