பென்ஸ் படத்திலிருந்து புதிய கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.
ராகவா லாரன்ஸ் நடிப்பில் தற்போது உருவாகும் திரைப்படம் தான் பென்ஸ். இந்த படத்தை பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ஜி ஸ்குவாட் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கிறார். அவருடன் இணைந்து பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனமும், தி ரூட் நிறுவனமும் இப்படத்தை தயாரிக்கிறது. சாய் அபியங்கர் இதற்கு இசையமைக்கிறார். ரெமோ படத்தின் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இந்த படத்தை இயக்குகிறார். படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து மாதவன், நிவின்பாலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. அதேசமயம் சம்யுக்தா இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் என பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில்தான் நேற்று (ஜூன் 3) இந்த படத்தில் இருந்து புதிய அறிவிப்பு வெளியானது.
Reveali’N’g our Baddie at 5 PM today 🔥#BenzCastReveal Today 💥@offl_Lawrence @GSquadOffl @PassionStudios_ @TheRoute @Dir_Lokesh @Jagadishbliss @Sudhans2017 @bakkiyaraj_k @SaiAbhyankkar @gouthamgdop @philoedit @jacki_art @actionanlarasu @PradeepBoopath2 @amudhanpriyan… pic.twitter.com/TIfNP1PiLa
— TheRoute (@TheRoute) June 4, 2025

அதன்படி இந்த படத்தின் வில்லன் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று (ஜூன் 4) வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. மேலும் படக்குழு கொடுத்த க்ளூவின் அடிப்படையில் அந்த வில்லன் நிவின் பாலி-யாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது படக்குழு புதிய கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டு வில்லன் தொடர்பான அறிவிப்பு இன்று மாலை 5 மணி அளவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.