spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாடிஆர்பி ரேட்டிங்கில் தெறிக்கவிடும் பாக்கியலட்சுமி

டிஆர்பி ரேட்டிங்கில் தெறிக்கவிடும் பாக்கியலட்சுமி

-

- Advertisement -

பிரபல டிவியில் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றது.பாக்கியலட்சுமி சீரியலுக்கு தினம் தினம் டிஆர்பி ரேட்டிங் அதிகரித்து கொண்டு போவதால் மக்களுக்கு தேவையான கருத்துக்களை சீரியல் மூலம் இயக்குநர் கூறி வருகிறார்.

சீரியலில் நடிகை சுசித்ரா – பாக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில், இவருக்கே மக்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

we-r-hiring

இந்த சீரியலில் மனைவிக்கு தெரியாமல் தனது காதலியுடன் பழகி வந்த கோபி அவரையே திருமணமும் செய்து கொண்டு வாழ்ந்து வருகின்றார்.

இந்த சீரியல் ஆரம்பத்தில் சாதாரணமாக சென்றாலும் கோபிக்கு இரண்டாவது திருமணம் செய்து கொண்டு குடும்பத்தை இரண்டாக பிரித்து தான் புதிய டுவிஸ்ட்டை வைத்துள்ளார்.

தனது கணவரால் கைவிடபட்டு ஒரு தனி பெண்மணியாய் வாழ்க்கையை அதிரடியாக தொடங்கியுள்ள பாக்கியலட்சுமி. கோபியை யோசிக்க வைக்கும் அளவிற்கு அசத்தும் பாக்கியா.

இந்நிலையில் கோபி தனது வீட்டை காலி செய்யுமாறு பாக்கியவிற்கு நெருக்கடி கொடுத்துவந்த நிலையில், 20 லட்சத்தினை கொடுப்பதற்கு பாக்கியா முழுவீச்சில் இறங்கி சமையல் ஆர்டரை வாங்கி வருகின்றார்.

பாக்கிய தனது மகன் எழிலுக்கு அவர் ஆசைப்பட்ட பெண்ணையே திருமணம் செய்து வைத்தார்.

பின்னர், கேட்டரிங் ஆர்டர்கள் முதல் கார் ஓட்டும் அளவு வளர்ந்துள்ள பாக்கியவின் வளர்ச்சியை பார்த்து தினம் தினம் கோபி ஆத்திரமடைந்து வருகிறார்.

சரளமாக ஆங்கிலம் பேசி அசத்திய பாக்கிய

இந்த நிலையில், பாக்கியவின் கேட்டரிங் ஓடரை இல்லாமல் செய்வதற்காக ராதிகா ஆங்கிலத்தில் சில கேள்விகளை கேட்டு, பாக்கியாவை அசிங்கப்படுத்தினார்.  ஆர்டரை பாக்கியா கைப்பற்றியுள்ள நிலையில், ஆங்கிலம் தெரியாததால் பாக்கியவை ராதிகா அவமானப்படுத்தினார்.

இதனால் கோபமடைந்த பாக்கிய ஆங்கிலம் கற்க வகுப்பு செல்கிறார். இதில் பழனிச்சாமி என்ற பெயரில் நடிகர் ரஞ்சித் சீரியலில் களமிறங்கி அசத்தி வருகின்றார்.

ஆங்கிலம் பேச தெரியாது என உதாசீனப்படுத்திய ராதிகாவின் முன் பாக்கியா சரளமாக ஆங்கிலம் பேசி மாஸ் காட்டினார். பின்னர் கேட்டரிங் திறப்பு நிகழ்வில் கலந்து கொண்ட போது ராதிகா முன் பூ கொடுத்து சரளமாக ஆங்கில பேசி ராதிகாவை அசிங்கப்படுத்தியுள்ளார்.

தற்போது தான் இந்த சீரியல் சூடு பிடிக்க கொடங்கியுள்ளது என ரசிகர்கள் கூறுகின்றனர். இதன் மூலம் எமது வாழ்க்கையில் முயற்சி செய்தால் முடியாதது என்று ஒன்றும் இல்லை என்பது தெளிவாகிறது.

MUST READ