யூட்யூபில் வீடியோ போடுவதன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் பூர்ணிமா ரவி. இவர் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். பல்வேறு ரசிகர்களைக் கொண்ட பூர்ணிமா கடந்த சில தினங்களுக்கு முன்பாக பிக் பாஸ் வீட்டில் இருந்து 16 லட்சத்திற்கான பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறினார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் பங்கேற்பதற்கு முன்பாக செவப்பி என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார் பூர்ணிமா. கிராமத்து கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தை எம் எஸ் ராஜா இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு பிரவீன் குமார் இசையமைத்துள்ளார். மனோகரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

மேலும் இதில் சிறுவன் ஒருவனுக்கு தாயாக நடித்துள்ளார் பூர்ணிமா. பூர்ணிமா உடன் இணைந்து ரிஷிகாந்த், ஆண்டனி, செபாஸ்டியன், ராஜாமணி பாட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் ஜனவரி 12ஆம் தேதி ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் என்று வெளியாகி கவனம் பெற்றுள்ளது. இந்த டீசரை நடிகர் சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Unveiling the magic! Presenting the teaser of ‘Sevappi – an aha original’. Heartfelt congratulations to the whole team.https://t.co/6a5DrzVSkL
Premieres Jan-12th@ahatamil @msraaja @DirRajeshwark@Prasannaba80053@vinoth_offl @IamPoornimaRavi @iam_rishikanth @SebastinAntonyE… pic.twitter.com/O9TLp9yOom
— Silambarasan TR (@SilambarasanTR_) January 6, 2024
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு பலருக்கும் சினிமா வாய்ப்புகள் தேடி வருகின்றன. அந்த வகையில் தற்போது பூர்ணிமா ரவிக்கும் பட வாய்ப்புகள் தேடி வருகிறதாம். அதேசமயம் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போதே பட வாய்ப்பு கிடைத்ததாகவும் கூறப்படுகிறது.
.