Homeசெய்திகள்சினிமா20 வருடங்களுக்கு முன் எழுதிய பாடலுக்கு நன்றி தெரிவித்த விக்ரம்..... நெகிழ்ச்சியடைந்த சினேகன்!

20 வருடங்களுக்கு முன் எழுதிய பாடலுக்கு நன்றி தெரிவித்த விக்ரம்….. நெகிழ்ச்சியடைந்த சினேகன்!

-

பிரபல நடிகர் விக்ரம் தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இதற்கிடையில் கடந்த 2017 ஆம் ஆண்டு விக்ரம் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் துருவ நட்சத்திரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. ஒரு சில காரணங்களால் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடையாமல் நிலுவையில் இருக்கிறது. 5 வருடங்கள் கழித்து இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் WhatsApp செயலியில் பெற

இந்நிலையில் நடிகர் விக்ரம் ஒரு விமான பயணத்தின் போது எதேர்ச்சியாக பிரபல பாடலாசிரியரும் , கவிஞருமான சினேகனை சந்தித்துள்ளார். அப்போது கடந்த 2003 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான சாமி திரைப்படத்தில் இடம்பெற்ற ‘கல்யாணம்தான் கட்டிக்கிட்டு’ எனும் பாடலை எழுதியதற்காக சினேகனிடம் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சினேகன் தனது ட்விட்டர் பக்கத்தில், “நம்ம விக்ரமோடு எதிர்பாராத ஒரு விமான பயணம். 20 ஆண்டுகளுக்கு முன் எழுதிய ‘கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா’ பாட்டுக்கு இப்போதும் நன்றி சொல்கிறார். என்றும் மாறாத நட்பு இளமை குறையாத பேச்சு அடர்ந்து வளர்ந்த திறமை அழகாய் சிரிக்கும் குழந்தை” என்ற நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார்.

பாடலாசிரியர் சினேகன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ