spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஎதிர்ப்புகளுக்கு மத்தியில் வசூலை அள்ளும் 'பைசன் - காளமாடன்'!

எதிர்ப்புகளுக்கு மத்தியில் வசூலை அள்ளும் ‘பைசன் – காளமாடன்’!

-

- Advertisement -

பைசன் – காளமாடன் படத்தின் வசூல் குறித்த விவரம் வெளியாகி உள்ளது.எதிர்ப்புகளுக்கு மத்தியில் வசூலை அள்ளும் 'பைசன் - காளமாடன்'!

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் கடந்த அக்டோபர் 17ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் தான் பைசன் – காளமாடன். இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், பசுபதி, அமீர், லால், ரஜிஷா மற்றும் பலர் நடித்திருந்தனர். கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும் சில அமைப்புகள் இந்த படத்தை எதிர்த்து வருகின்றனர். ஏனென்றால் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வந்த மாரி செல்வராஜ், தனது வாழ்க்கையில் சந்தித்த பிரச்சனைகள், ஒடுக்கப்பட்ட மக்களின் அடக்குமுறைகள், சமூகத்தில் சொல்லப்படாத சொல்ல வேண்டிய விஷயங்களை தன்னுடைய ஒவ்வொரு படங்களிலும் தொடர்ந்து பேசி பாராட்டுகளைப் பெற்று வருகிறார். எதிர்ப்புகளுக்கு மத்தியில் வசூலை அள்ளும் 'பைசன் - காளமாடன்'!அந்த வகையில் பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை ஆகிய படங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், விவாதமாகவும் மாறியது. அதுபோல தான் தற்போது இவர் இயக்கி இருக்கும் ‘பைசன்’ படமும் பேசு பொருளாக மாரி உள்ளது. ஆனாலும் இந்த படம் ரசிகர்களை கவர்ந்து பல்வேறு தரப்பினரிடையே
பாராட்டுகளை பெற்று வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதன்படி இப்படம் வெளியான முதல் நான்கு நாட்களில் ரூ.16 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

MUST READ