- Advertisement -
மோலிவுட் எனும் குறுகிய வட்டத்தில் வெளியாகி குறைந்த அளவில் வசூலை பெற்று வந்த திரைப்படங்கள் மலையாளப் படங்கள். இவற்றில் ஓரிரு திரைப்படங்கள் மட்டும் மலையாள மொழியைத் தாண்டி தமிழ் மொழியிலும் மற்ற மொழிகளிலும் வரவேற்பை பெற்று ஹிட் அடித்திருக்கின்றன. த்ரிஷயம், ஹிருதயம், சிபிஐ, பிரேமம் உள்ளிட்டவை இவற்றில் அடங்கும். அந்த வகையில் கடந்த சில மாதங்களாக மலையாள மொழியில் வெளியாகும் அனைத்து படங்களுமே மோலிவுட்டை தாண்டி பல மொழிகளில் படம் ஹிட் அடிக்கின்றன. மலையாள ரசிகர்கள் மட்டுமன்றி தமிழ், தெலுங்கு என ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களிடமும் வரவேற்பை பெற்று வருகின்றன.

அதில் மோகன்லால் நடித்த பிரம்மயுகம், மமிதா நடித்த பிரேமலு மற்றும் மஞ்சும்மல் பாய்ஸ் படங்களும் அடங்கும். அந்த வகையில் கடந்த மாதம் 9-ம் தேதி மலையாள மொழியில் கிரிஷ் இயக்கத்தில் வௌியான திரைப்படம் பிரேமலு. இதில் மமிதா பைஜூ, நஸ்லேன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படம் 3 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவானது. ஆனால், இத்திரைப்படம் தற்போது 90 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.




