Homeசெய்திகள்சினிமா'ப்ளடி பெக்கர்' படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு!

‘ப்ளடி பெக்கர்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு!

-

ப்ளடி பெக்கர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகி உள்ளது.'ப்ளடி பெக்கர்' படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு!

கவின் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் தான் ப்ளடி பெக்கர். இந்த படத்தினை ஜெயிலர் படத்தின் இயக்குனர் நெல்சன் தனது பிலாமென்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்க அவரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சிவபாலன் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் கவின் உடன் இணைந்து ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ் ராஜ், சுனில் சுகதா, மிஸ் சலீமா, பிரியதர்ஷினி ராஜ்குமார், அக்ஷயா ஹரிஹரன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். ஜென் மார்ட்டின் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சுஜித் சாரங் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்த படத்தில் நடிகர் கவின் யாசகராக நடித்திருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் டீசரும், ட்ரைலரும் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி இருக்கும் இந்த படம் வருகின்ற அக்டோபர் 31 அன்று தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாக மிகத் தீவிரமாக தயாராகி வருகிறது. அதன்படி படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த படத்திலிருந்து பெக்கர் வாலா எனும் இரண்டாவது பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ