Homeசெய்திகள்சினிமாபோட்டிக்கு போட்டி நின்ற ப்ளூ ஸ்டார்... சிங்கப்பூர் சலூன்...

போட்டிக்கு போட்டி நின்ற ப்ளூ ஸ்டார்… சிங்கப்பூர் சலூன்…

-

- Advertisement -
ஒரே நாளில் இரண்டு அல்லது மூன்று திரைப்படங்கள் வெளியாவது இன்று வழக்கமாக உள்ளது. இன்றைய காலக்கட்டத்தில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களே ஒரே நாளில் 4 வெளியாகின்றன. பொங்கலை முன்னிட்டு டாப் நடிகர்களின் படங்கள் போட்டிக்கு போட்டியாக திரையில் வெளியாகின. அந்த வகையில் ப்ளூ ஸ்டார் திரைப்படமும், சிங்கப்பூர் சலூன் திரைப்படமும் ஒரே நாளில் நாளை வெளியாகின்றன.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நாயகர்கள் அசோக் செல்வன் மற்றும் சாந்தனு. இதில் அசோக் செல்வன் மாறுபட்ட கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் வல்லவர் என்றுதான் சொல்ல வேண்டும். தற்போது இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் தான் ப்ளூ ஸ்டார். எஸ்ஜெயக்குமார் இப்படத்தை இயக்கி இருக்கிறார். இப்படத்தில் அசோக் செல்வனுடன் கீர்த்தி பாண்டியன், பிருத்விராஜன், பகவதி பெருமாள் ஆகியோர் நடித்துள்ளனர். பா ரஞ்சித் தயாரித்து உள்ளார்.

அதேபோல ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் சிங்கப்பூர் சலூன். இதில் சத்யராஜ், மீனாட்சி சௌத்ரி, கிஷன் தாஸ் , ஜான் விஜய், ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த இரண்டு திரைப்படங்களும் நாளை வெளியாக உள்ளன. இந்நிலையில், நேற்று இரவு சென்னையில் இரு படக்குழுவுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. படத்தை புரமோசன் செய்யும் விதமாக இந்த போட்டி நடந்தது. அதில் ஆர்ஜே பாலாஜி, அசோக் செல்வன், சாந்தனு ஆகியோர் பங்கேற்று விளையாடினர்.

MUST READ