அசோக் செல்வன், சாந்தனு கூட்டணியில் ப்ளூ ஸ்டார் எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை இயக்குனர் பா. ரஞ்சித், நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளார். எஸ்.ஜெயக்குமார் இதனை இயக்கியுள்ளார். இப்படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து, கிரிக்கெட் விளையாடும் இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை பின்னணியாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அசோக் செல்வன் மற்றும் சாந்தனுடன் இணைந்து கீர்த்தி பாண்டியனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் பிரித்திவிராஜன், பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், அருண் பாலாஜி, தாமு, ஜெயச்சந்திரன், ஜெயபெருமாள் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தமிழ் ஏ அழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார் .
இப்படம் வருகின்ற ஜனவரி 25ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் அட்டகாசமான ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
Nammala edha onnu azha vekkudhu na, namma adhuku unmai-ah irukom nu artham🔥
Presenting you the highlights before the innings#BlueStarTrailer💙🌟
▶️ https://t.co/NvpCY2BsQ4A film by @chejai007
A #GovindVasantha Musical
Produced by @lemonleafcreat1#BlueStarFromJan25… pic.twitter.com/Iy94zwYTry— Neelam Productions (@officialneelam) January 10, 2024

இந்த ட்ரெய்லரில் அசோக் செல்வனுக்கும் கீர்த்தி பாண்டியனுக்கும் இடையிலான காதல் காட்டப்படுகிறது. அதேசமயம் கிரிக்கெட் விளையாட்டில் வெற்றி பெற வேண்டும் என நினைக்கும் இரு தரப்பு இளைஞர்களின் முயற்சிகளும் காட்டப்படுகிறது. இந்த இளைஞர்கள் விளையாடவே தகுதி வேண்டும் என்று கூறும் சமூகத்தில் எப்படி ஜெயித்துக் காட்டுகிறார்கள் என்பதே இந்த படத்தின் கதையாக இருக்கும் என தெரிகிறது.