நடிகர் சூர்யா தற்போது கங்குவா திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி திரைக்கு வரும் நிலையில் இதற்கான ப்ரோமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக திஷா பதானி நடிக்க வில்லனாக பாபி தியோல் நடித்திருக்கிறார். இந்த படத்தின் டீசரும், ட்ரைலரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்தது இரண்டாவது ட்ரைலர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ப்ரமோஷன் நிகழ்ச்சியின் கலந்து கொண்ட சூர்யா, அனிமல் படத்தில் பாபி தியோலின் பாடி பில்டிங்கை பார்த்து பலரும் மிரண்டு விட்டதாகவும் கங்குவா திரைப்படத்தில் அவருக்கு நிகராக சண்டை போட தான் 49 வயதில் சிக்ஸ் பேக் வைத்திருப்பதாகவும் பேசினார்.
அதைத்தொடர்ந்து பேசிய பாபி தியோல், சூர்யாவின் உயரம் குறித்து பேசி உள்ளார். அதாவது “நடிகர் சூர்யாவின் உயரம் இங்கு முக்கியம் கிடையாது. அவர் எவ்வளவு உயரமான இடத்தில் இருக்கிறார் என்பதுதான் முக்கியம். மனதளவில் உயர்ந்த மனிதர் சூர்யா. அவர் எல்லா ஸ்டன்டுகளையும் எளிமையாக செய்வார்.
அப்படி கங்குவா படத்திற்காக செய்யும்போதுதான் அவருக்கு விபத்து ஏற்பட்டது. அது பயங்கரமான விபத்து. ஆனால் அதிர்ஷ்டவசமாக பெரிய காயம் ஏற்படவில்லை. இவர் மற்றவர்களுக்கு டஃப் கொடுப்பவர்” என்று தெரிவித்துள்ளார்.
- Advertisement -