நடிகர் பிரபாஸ் நடிப்பில் கடைசியாக கல்கி 2898AD திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நாக் அஸ்வின் இயற்றியிருந்த இந்த படம் கிட்டத்தட்ட 1100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மிகப்பெரிய சாதனை படைத்தது. அடுத்ததாக நடிகர் பிரபாஸ், தி ராஜாசாப் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படமானது அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வர இருக்கிறது. மேலும் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாக இருக்கும் சலார் 2 திரைப்படத்தையும் கைவசம் வைத்துள்ளார் பிரபாஸ். இதற்கிடையில் இவர், அர்ஜுன் ரெட்டி அனிமல் உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ஸ்பிரிட் எனும் திரைப்படத்தில் நடிக்கப் போவதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. பிரபாஸின் 25 ஆவது படமாக உருவாக இருக்கும் இந்த படத்தில் நடிகர் பிரபாஸ் போலீஸ் அதிகாரியாக நடிக்கப் போகிறார் என்றும் தகவல் வெளியாகி வருகின்றனர். அடுத்தது இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டில் துவங்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் பிரபல பாலிவுட் ஜோடியான சைஃப் அலிகான், கரீனா கபூர் ஆகியோர் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே இந்த படத்தில் நடிகை திரிஷா வில்லியாக நடிக்கப் போகிறார் என்று சொல்லப்பட்டது. அதைத் தொடர்ந்து கொரியன் சூப்பர் ஸ்டார் மா டோங் சியோக் வில்லனாக நடிக்கப் போகிறார் என்று செய்திகள் வெளியாகி வந்தது குறிப்பிடத்தக்கது.