spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவு..... திரை பிரபலங்கள் இரங்கல்!

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவு….. திரை பிரபலங்கள் இரங்கல்!

-

- Advertisement -

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா (வயது 86) மும்பை மருத்துவமனையில் நேற்று (அக்டோபர் 9) உயிரிழந்தார். இவருடைய மறைவிற்கு திரை பிரபலங்கள் பலரும் தங்களின் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவு..... திரை பிரபலங்கள் இரங்கல்!

அதன்படி மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தனது சமூக வலைதள பக்கத்தில், “ரத்தன் டாடா என்னுடைய ஹீரோ. என் வாழ்நாள் முழுவதும் நான் பின்பற்ற முயற்சித்தவர். தேசத்தை கட்டி எழுப்புவதில் அவரது பங்களிப்பு மிகவும் முக்கியமானது. என்றென்றும் நவீன இந்தியாவின் கதையில் பொறிக்கப்படும் ஒரு தேசிய பொக்கிஷம். ஒருமைப்பாடு, மனிதநேயம், தேசபக்தி, நெறிமுறை போன்றவை தான் அவருடைய உண்மையான செல்வம். அவரது குடும்பத்தினர், நண்பர்கள், டாடா குழுமம் மற்றும் எனது சக இந்தியர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

we-r-hiring

ரத்தன் டாடா மறைவு குறித்து ஏ ஆர் ரகுமான் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “சில மனிதர்கள் வாழும் புத்தகங்கள். அவர்கள் மரபு, வெற்றி, தலைமை போன்றவற்றை கற்றுத் தருபவர்கள். நம்மை ஊக்குவித்து வழி நடத்துபவர்கள். இந்தியா ஒரு உண்மையான மகனையும் சாம்பியனையும் இழந்துவிட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் சூர்யா, “ரத்தன் டாடாவின் மறைவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. தொலைநோக்கு பார்வை கொண்ட இரக்கமுள்ள, மனிதநேயமிக்க தலைவர். நெறிமுறைகளுக்கான அடையாளமாக விளங்கியவர். அவருடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் நடிகர் மாதவன், “தொலைநோக்கு பார்வை கொண்ட பண்புடையவர் ரத்தன் டாடா. அவருடைய வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது. தலைமுறைகளுக்கு உத்வேகம் அளிக்கக் கூடியவர். அவருடைய மறைவு வருத்தம் அளிக்கிறது” என்று இரங்கல் பதிவை வெளியிட்டுள்ளார்.

நடிகர் பிரகாஷ்ராஜ், “ரத்தன் டாடா பலருக்கும் ஊக்கமளித்து உதவக்கூடியவர். தேங்க்யூ ரத்தன் டாடா. மிஸ் யூ சார்” என்று தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் சல்மான்கான், “ரத்தன் டாடாவின் மறைவு மிகுந்த வருத்தத்தை தருகிறது” என்று பதிவிட்டுள்ளார்.

ராம்சரண் வெளியிட்டுள்ள பதிவில், “ரத்தன் டாடாவின் மறைவு நாட்டுக்குப் பேரிழப்பு. அவர் ஒரு லெஜன்ட். சாமானிய மனிதர் முதல் தொழில்துறை முன்னோடிகள் வரை அனைவரின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்” என்று புகழஞ்சலியுடன் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

MUST READ