ரஜினி நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தில் சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் மோகன்லால், சிவ ராஜ்குமார் மற்றும் சஞ்சய் தத், சுனில் என பல மொழிகளின் ஸ்டார் நடிகர்கள் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்தப் படத்தை அடுத்து ரஜினிகாந்த் ‘ஜெய் பீம்’ படத்தின் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கின்றனர். ப
இந்தப் படத்தில் ரஜினி ஒரு முஸ்லிம் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்தப் படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாக இருக்கிறதாம்.
தற்போது அப்டேட் என்னவென்றால் சூர்யா இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. அதுவும் அவரது கதாபாத்திரம் படத்தில் 15 நிமிடங்கள் இருக்குமாம். அப்படி நடந்தால் ‘விக்ரம்’ கிளைமாக்ஸ் மாதிரி தியேட்டர்கள் அலறும்.
பார்ப்போம் இன்னொரு முறை அந்த மேஜிக் நிகழுமா என்று!