கேப்டன் மில்லர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகி உள்ளது.
ராக்கி, சாணி காயிதம் உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் கேப்டன் மில்லர். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும் சிவராஜ் குமார், ஜான் கொக்கேன், நிவேதிதா சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். பீரியாடிக் படமாக உருவாக்கியுள்ள இந்த படம் மூன்று பாகங்களாக வெளியாக இருக்கிறது. அதன்படி முதல் பாகம் 1940 களிலும் இரண்டாம் பாகம் 1990 களிலும் மூன்றாம் பாகம் தற்போது நடப்பவை போன்றும் படமாக்கப்படுகிறது.
Captain Miller second single https://t.co/Su7SRHqjRT pic.twitter.com/wsTjXsERbH
— Dhanush (@dhanushkraja) December 23, 2023

சமீபத்தில் படத்தின் பர்ஸ்ட் லுக் அதை தொடர்ந்து டீசரும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அது மட்டும் இல்லாமல் முதல் பாடலும் வெளியாகி கவனம் பெற்ற நிலையில் தற்போது இரண்டாவது பாடல் வெளியாகி உள்ளது. அதன்படி காபர் வாசுகி உன் ஒளியிலே எனும் பாடலை எழுதியுள்ள நிலையில் ஷான் ரோல்டன் பாடலை பாடியுள்ளார் தற்போது இந்த பாடல் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.
மேலும் படம் 2024 பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.