spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகேப்டன் மில்லர் படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா... சென்னையில் ஏற்பாடு...

கேப்டன் மில்லர் படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா… சென்னையில் ஏற்பாடு…

-

- Advertisement -
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் பல படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தனுஷ், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தில் தனுஷ் உடன் இணைந்து சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் 3 பாகங்களாக உருவா உள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து படத்திலிருந்து முதல் இரண்டு பாடல்களும் வெளியாகி கவனம் பெற்றது. நேற்று மாலை மூன்றாவது பாடலும் வெளியானது. இப்பாடலை உமா தேவி எழுதியிருந்தார். தேவா, சந்தோஷ் ஹரிஹரன், அலெக்சாண்டர் பாபு ஆகியோர் இணைந்து பாடி இருக்கின்றனர். தனுஷின் கேரியரில் மிகவும் முக்கியமான படமாக கருதப்படும் இந்த படத்தின் டிரைலரும் விரைவில் வெளியாக இருக்கிறது. மேலும் இத்திரைப்படம் 2024 பொங்கல் பண்டிகையை ஒட்டி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில் இன்று மாலை சென்னையில் உள்ள நேர உள்விளையாட்டு அரங்கில் கேப்டன் மில்லர் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. இதில், 2 ஆயிரம் ரசிகர்கள் பங்கேற்கும் அளவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம். தமிழகம் மட்டுமன்றி வெளி மாநிலங்களில் இருந்தும் பலர் வரவுள்ளதாக கூறப்படுகிறது.

MUST READ